Thursday, March 4, 2010

முட்டாள் மனிதர்கள்!

ஏதோ சாமியாராம். அவர் இப்போது அவர்கள் நினைத்த மாதிரியான சாமியார் இல்லையென்று என்று தெரிந்து விட்டதாம். அதனால் அவர் இதுவரை சொல்லிவந்த, நேற்று வரை சரியானதாக தோன்றிய கருத்துகள் எல்லாம் களங்கப்பட்டுவிட்டதாம்.அதனால் அவர் மீதும், அவரை இதுவரை நம்பி வந்தவர்கள் மீதும், அவரோடு உறவாடியவர்கள் மீதும் கோபம் கோபமாய் வருகிறதாம்.

இப்படி கோபப்படுபவர்கள் தத்தம் தன்னம்பிக்கை மீறிய சாமியார் நம்பிக்கைகளின் பின்னுள்ள மடமையை கோபம் மூலம் மூடிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது.

பங்காரு போன்றவர்கள் எறும்பு, ஈசல் வாழும் மண் புற்றில் சுயம்பு சக்தி என்று புருடா விட்டு இன்று சில ஆயிரம் மாணவர்கள் கொண்ட கல்வி நிறுவனங்கள் நடத்தும் போது,புது சாமியார்கள், அதை ஒரு career choice ஆக நினைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் - அதை நம்புவர்கள் அல்லவா முட்டாள்கள்.

Hypocrites rule!

எல்லா பொய்மைகளும் ஒவ்வொருவிதத்தில் ஒன்றோடு ஒன்றாகி நம் சமூக முறைகளாய் இருக்கும் வரை தனிப்பட்ட முரண்பாடுகள் களைவது அதீத முயற்சி தான். ஆனாலும் ஒவ்வொன்றாய் விடியும் :)

Thursday, February 25, 2010

சுஜாதா... எழுத்திலடங்கா எண்ண அலைகள்!


சுஜாதா இறந்ததை அறிந்த போது வருத்தம் வார்த்தையில் வரவில்லை.

இன்று அவர் பற்றிய நரசிம்மின் வார்த்தைகளை படித்தபொழுது எழுந்த நினைவலைகள் இங்கே.

வலையுலகம் இல்லா காலத்தில், தாய்மொழி மட்டும் அறிந்திருந்த எண்ணிலடங்கா வாசகர்களுக்கு, பல துறை சார்ந்த அறிவையும், பொழுது போக்காக, ஒரு நண்பராக - its no big deal என்ற அளவில், கல்லாததை பற்றிய பயம் தோற்றுவிக்காமல், கற்பதற்கான ஆர்வத்தை உருவாக்கியவர்.

எப்பொழுதும், எந்த வகையில் பார்த்தாலும், ஒரு முற்போக்கானவராகவும், இளமையான பார்வைகளை, துள்ளல் குறையாமல் அதே சமயம் முதிர்ச்சியாக, நிலை தளராமல் கையாள்வதிலும் அவரை தவிர்த்து தமிழ் எழுத்துக்கள் முழுமை அடையா.

அனுபவித்ததை பகிர்வதாக இருந்தாலும் சரி, கற்பனைகளின் ஆனந்தங்களை உணர்த்துவதனாலும் சரி, பள்ளி கல்வியின் இடைவெளி நிரப்புவதிலும் சரி, எந்த பக்கம் யோசித்தாலும், யோசித்து முடிக்கவும் முடியவில்லை, அவரை சிலாகிக்காமலும் இருக்க முடிவதில்லை.

அவர் எழுத்தின் பின் இருந்த ஊக்கம் பற்றி எனக்கு எப்போதும், இப்போதும், அளவிலங்கா ஆர்வம் உண்டு. அவர் கடைசி துளி உயிர் பிரியும் போது கூட, பகிரத்துடிக்கும் எண்ணங்களையே அவர் மனம் நினைத்திருந்துக்க கூடும் என்று நினைக்கிறேன்.

செறிந்த பண்பாளராகவும், தெறிந்த சிந்தனையாளராகவும், எழுத்தின் வாயிலாக நம் தேடலை தூண்டி அதன் மூலம் நம்மில் பலரின் சுயவளர்ச்சிக்கு வித்திட்ட வகையில், பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவராக என் நினைவில் அவர் என்றும் இருப்பார்.

Friday, November 14, 2008

பத்தோடு பதினொன்னு!

//எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்....//
வயசு ஞாபகம் இல்லாத வயசுலே பார்த்த சினிமால ஒரு சீன் ஞாபகம் இருக்கு....கருப்பு வெள்ளையிலே மாடிப்படி மேலிருந்து ஒரு பழம், வெத்திலை பாக்கு தட்டு பறக்கும்....ஒரு சலங்கையும் பறக்கும்..அது சலங்கைன்னு தெரிய ரொம்ப வருஷம் ஆச்சு....

//கடைசியில் அரங்கில் பார்த்த சினிமா?//
தசவாதாரம்!...முதல் சீன்; பூவராகன்; நாய்டு - நான் கொடுத்த பணம் திருப்தி தான்.

//அரங்கிலன்றி பார்த்த சினிமா?//
பச்சை கிளி முத்து சரம், பில்லா ரெண்டும் பிடிச்சுது...ப.கி.மு.ச ஜோதிகா great show. கதை & இயக்கம் அருமை. சரத் கூட அருமை. ஓல்ட் ஹீரோ, stereotype ஹீரோயின் எரிச்சல் வரலை. பில்லா - ஹிந்தி டான் விட நல்ல எடுத்திருந்தாங்கன்னு எனக்கு தோனுது.... much better than original.

//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?//
கன்னத்தில் முத்தமிட்டாள்....பிறந்த மண், கொண்ட காதல், பெற்ற பிள்ளை எல்லாம் இழந்த நந்திதா தாசின் வெறுமை நிறைந்த கண்களும்,...கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை சூழலில் புலம் பெயரும் மக்கள் கூட்டமும் பாதிக்க தான் செய்தன.

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?//
அரசியலையே சினிமாவா பார்க்கிறேன். எதுவும் என்னை ஆச்சரியப்படுத்துவது இல்லை.

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?//
பி சி ஸ்ரீராம் முதலில் இயக்கிய படத்தில் சில ஒளிப்பதிவுகள் ரசிக்க வைத்தது; மைக்கேல் ம. கா. படத்தில், நாலு கமலும் தோன்றும் கடைசி காட்சிகள் யோசிக்க வைத்தது.

//தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?//
ஸ்கூல் வயசில் 'லைட்ஸ் ஆன்'. இப்போது, கூகிள் தமிழ் செய்தியில் எப்போவாது...

//தமிழ்ச்சினிமா இசை?//
மனநிலைக்கு தகுந்த தமிழ் பாட்டு கேட்க நேர்ந்தால் மனசு துள்ளும். எல்லா வகையும் புடிக்கும். ரொம்ப ஞாபகம் வச்சி சிலாகிக்கற பழக்கம் இல்லை. செல், mp3 கேட்கற பழக்கமும் இல்லை. சென்னை போகும் போதெல்லாம் கார் ரேடியோ நிச்சயம்.

//தமிழ் தவிர...//
நிறைய இருக்கு. சின்ன வயசில் சண்டே அவார்ட் படம் நிறைய விடாமல் பார்த்து புரிஞ்சுக்க பார்ப்பேன்.
ஹிந்தி ரொம்ப கொஞ்சம், யாரவது இழுத்துக்கொண்டு போனால் மட்டுமே. ரொம்ப பிடித்தது dil chata hai - பல முறை பார்த்து புதிது புதிதா புரிந்து ரசித்தபடம்.
மலையாளம் கொஞ்சம் அதிகமாக..கிலுக்கம் பிடித்ததில் ஒன்று, 'வெள்ளித்திரை' மலையாள ஒரிஜினல் பார்த்து பிடித்தது.
ஆங்கிலம் நிறைய - US/UK ல தனியா இருக்கும் பொது நண்பர்களுடன் நிறைய பார்ப்பேன், இப்ப பெரும்பாலும் சின்ன திரை தான். ரொம்ப புடிச்சது..'as good as it gets' it was quite insightful on human behaviour. அதுல ஒரு வசனம்...it goes something like...jack nicholson: 'you made me want to think of myself and improve myself' என்று வரும்...implying ...because he cared about her, he wanted to be a better person for her and so he was ready to address his behaviour issues'; btw, I used to watch helen's 'made abt you' serial on US tv that time...so it was helen who drew me in but it was jack in my thoughts thereafter.
...'Departed'; 'pretty woman'; 'fools rush in', 'pirates of carribean..all' எல்லாம் பிடிக்கும்.
//தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம்...//
காக்க காக்க, மொழி, ப.கி.மு.ச...ரொம்ப பிரகாசம் தான்.. கொஞ்சம் வாரிசு ஆதிக்கம்; ஓல்ட் மென் குறைஞ்சா தேவலாம்.
//அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?//

எல்லா மால்லேயும் 'சித்தி' மாதிரி கொலை வெறி தொடர் தாக்குதல் ஆரம்பிச்சுடுவாங்க. தமிழர்கள் என்றால் உணர்ச்சிவசமான, ஒரு மார்க்கமா கலர் டிரஸ் போடறவங்க போன்ற அபிப்பராயங்கள் கொஞ்சம் குறையலாம். கொஞ்ச நாள் நம்ம சினிமாவிலிருந்து லீவ் கிடச்சா நல்லா தான் இருக்கும்.

வருண் & SK க்கு நன்றி....என்னை ஞாபகம் வச்சி கேட்டதிற்கு. பத்தோடு பதினொன்னா ஒரு நினைவலையை எழுப்பி பதிவையும் போட்டுட்டேன்!

Friday, October 10, 2008

உலகப் பொருளாதாரமும் ஐரோப்பிய நங்கையும்...

நான் இருந்த மூணு நாட்களாக அழுது வடிந்த வானம், இன்று காலை பனி கோர்த்த மலராய் பளீர் என விடிந்திருந்தது. என் மனநிலைக்கு எதிர்மாறாய். ஜன்னலுக்கு வெளியே, hyde park அதன் அடர்ப்பச்சை புல்வெளியோடு இங்கிலாந்தின் அழகை, லண்டனின் நெரிசலையும் மீறி பறைசாற்றி கொண்டிருந்தது.

எதிரில் கோர்டன் பிரவுன் உலகப் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்த முயன்று கொண்டிருந்தார் - பிபிசி வழியாக.
அடப்போங்க...நீங்கெல்லாம் ரொம்ப லேட் & வேஸ்ட்! நேற்று நான் தொலைத்த லட்சங்கள் திரும்பவா போகிறது என்று நினைத்த போது, என் வைஷுவின் வார்த்தைகள் அரவணைப்பாய் ஒலித்தது...

"நாம வேணா திரும்ப அங்கேயே போலாம். நானும் வேலைக்கு போறேன்"

"ம்ம்ம்...சம்பாதிச்சிக்கலாம், ஆனா போன வாரம் மேலும் கொஞ்சம் மார்ஜின் குடுங்கன்னு பேங்க் ல கேட்ட போது, நான் யு கே அவசரமா போறேன், ஒரு வாரத்துல ஏற்பாடு பண்றேன் - அதுக்குள்ளே 25% விழுந்துடுமான்னு இருந்துட்டேனேனு நினைச்சா கஷ்டமா இருக்குடா. போன மாசமே வந்தது போதும்னு வித்திருந்தா பாதி வீட்டுக்கடனை அடிச்சிருக்கலாம்" என்று சோகப்புராணம் படித்தேன்.

"நம் நேரம் அப்படி. எல்லாம் நம் கையிலா இருக்கு" என்று சமாதானப்படுத்த முயன்றாள்.

"அப்படி இல்லேடா. இதை என்னால் சமாளிச்சிருக்க முடியும் ஆனா பதட்டப்படாம இருக்கறதா நினைச்சி கவனக்குறைவா இருந்துட்டேனே" என்றேன்.

வேறொரு சமயமாக இருந்திருந்தால், இல்லை, நேரில் பேசியிருந்தால் பதில் வேறாகி இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு மௌனமே பதிலாய் இருந்தது. silence unsettled me.

"okay da. I'm bit...well, quite depressed but not broken. என்ன இருந்ததில் தானே போயிற்று. anything that doesnt kill us can only make us stronger" என்று ஏதோ உளறினேன்.

"ம்ம்ம் போனது போகட்டும். நீ பத்திரமா வா. இப்ப குட்டிக்கிட்ட பேசு...ரொம்ப நேரமா வெயிட்டிங்" என்று சேனல் மாற்றிவிட்டாள்.

"அப்பா... ஆர் யு கமிங் டுடைய்ய்...." என்று இன்னமும் மாறாத பிரிட் அக்சென்ட்டில் என் மனசை லேசாக்கினான்.

"ஆமாண்டா கண்ணா கிளம்பிட்டே இருக்கேன்"

"வாட் டைம்"

"5 மணிக்கு நாளை காலை- நீ தூங்கி எழுந்திருக்கும்போது, நான் உன்னோட இருப்பேண்டா கண்ணா. நீ சமர்த்தா இரு" என்றேன்.

"ஓகே...ப பை ..." யோடு ஓடும் சத்தம் கேட்டது.

அடுத்து எப்போதாவது கிடைக்கும் "லவ் யு" ஒலியோசையோடு உயிரோசையும் கலந்து மனதிற்கு மருந்தானது.

"சரி...இப்ப போய் குட்டிக்கு அந்த trampoline வாங்கிக்கிட்டு கிளம்பி வரேன்" என்றேன்.

"அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு வா போதும்" என்றாள் உறுதியாக.

"சரி...இன்னும் 10 நாள்ல இன்னொரு விசிட் இருக்கு. அப்ப வேணாப் பார்த்துக்கலாம். இப்ப வேற ஏதாவது வாங்கிட்டு வரேன்" என்று ஜகா வாங்கினேன்.

அடுத்த சில மணிநேரங்கள் பறந்தன.

வேற இடம்...மெல்ல நகர்ந்த நீண்ட கியூ. மீண்டும் கோர்டன் பிரவுன்...இந்த முறை வானத்திலிருந்து...(அதாங்க...ஸ்கை டிவி).

வளையோசையென கலகலவென நங்கையர் நகைக்கும் ஓசை - வீங்கியிருந்த மனசு ஆவலாய் சேனல் மாறியது.

இளவயது ஐரோப்பிய நங்கையர் கூட்டம்...அதில் ஒருத்தி வேகமாய் துணி உரித்துக் கொண்டிருந்தாள்.

அரை நிமிடத்தில் மூணு லேயர் துணி உரித்த பின் மீதமிருந்தது உடலோடு ஒட்டிய பின்னலாடை மட்டுமே.

பாதி கருப்பு வண்ணம் பூசிய பளிங்கு சிற்பமாய் மிளிர்ந்தாள்.

அட..லூவ்ர் ம்யுசியம்ல தேடுவாங்களே...என்ற கவலையோடு..அடுத்தது என்ன ஒட்டியாணமாய் இருக்கும் பெல்ட்டா இல்லை...அந்த பூப்பாதங்களை மறைக்கும் ஷூக்களா ...கால் நகம் பூசியிருப்பளோ..என மனசு உற்சாகமாய் ஆராய்ந்தது.

உள்மனதிலிருந்து ஒரு கூச்சல்....மேலே ஒரு முகமிருக்குமே என்று.

ஏறிட்டு பார்த்தால்...அழகாய் புன்முருவலிட்டாள். சந்தேகமேயில்லை...அவள் ஒரு பிரெஞ்சு ஆக மட்டுமே இருக்க முடியும்.

அவளொரு சிரிக்கும் சிற்பமா இல்லை சிலையாய் ஒரு கவிதையா என்ற குழம்பியபோது...

"sir....this way please..." என்று வேறொரு பெண் குரல்.

அடுத்தது என் முறை...பயணியர் பாதுகாப்பு சோதனைக்கு. :)

Sunday, August 31, 2008

ஏதாவது செய்யணும் பாஸ்!

இன்று ஏதாவது செய்யணும் பாஸ்! பார்த்து, அதன்பின் நரசிம் அறிவித்திருக்கும் போட்டி
படித்தபோது தோன்றிய சில கருத்துக்கள்...

பல விஷயங்களில் அரசையும், அரசியல் வாதிகளையும் நம்பியது, 80-90 களோடு ஒழியட்டும். இன்றைய தேதியில் நிகழ்வது தகவல் புரட்சி. இதனுடன், தொழில் முனைவது ஒரு புரட்சியானால், நம் ஒவ்வொரு பொது பிரச்சினையுமே ஒரு வாய்ப்புதான்!

சில 'வாய்ப்புகள்' இங்கே ...

- TOI அறிவித்துள்ள teachindia போன்ற உதவி தேவைபடுகிறவர்களையும், உதவக்கூடிய ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலான சேவைகள் - இது பல பிரிவுகளுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு அனுபவம் தேடுவோர் ஒருப்பக்கம் - வேலை செய்வோருக்கு நிறைய சம்பளம் கொடுக்க முடியாத தொழில் முனைவோர் மறுப்பக்கம்; கல்வி செலவிற்கு பணம் தேவைப்படும் ஏழை மாணவர்கள் ஒருப்பக்கம்- உண்மையான தேவைகளுக்கு நன்கொடை கொடுக்க தயாரோனோர் மறுப்பக்கம்; volunteer mentoring for career/educational options; பரவலாக கிடைக்கதற்கரிய துறைகளில் உள்ள நிபுணர்களின் கருத்து பரிமாறுவதற்கான அமைப்புகள் (say a forum for entreprenuers to setup a Limited company with guidances on legal, funding challenges; export trade guidance for SME etc)

- சிறு விழாக்கள், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் பற்றிய பெயர், தர, விவர சேவை.

- இணையம் மூலம் கார் பயணம் பகிர்தல் (realtime car pooling)

- நமக்கு தேவைப்படாத பொருட்களை விற்பதற்கான சந்தை (garage sale, charity sale events)

- நகர்புறங்களில், சிறு சிறு வேலை செய்பவர்கள் பற்றிய, தர உத்திரவாதத்துடன், வரையறுக்கப்பட்ட கூலியுடன் கூடிய பெயர்விவர சேவை - உதாரணத்திற்கு ஒரு சொந்த அனுபவம்.. சென்ற வாரம் பெங்களூர் போயிருந்தபோது, சுவரில் படங்கள் மாட்ட ஆணி அடிக்க, 1 மணி நேர வேலைக்கு, அரை நாள் தேடி, சில மணிநேரங்கள் காத்திருந்து 300 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. நொந்த விஷயம் என்னவென்றால், என் அவசரத்திற்கு, கிட்ட தட்ட கெஞ்சி, காரில் கூட்டி போய், காரில் திரும்ப விட்டு ம்ம் பேசாமல், அடுத்த முறை DIY தான் என்று நினைக்க வைத்தது :( ஒவ்வொரு முறையும், electrical, plumbing, தச்சு, கட்டிட பராமரிப்பு வேலை செய்ய முனையும் போதும் இந்த கதை தான்.

தெருவிற்கு இரண்டு electrical கடைகள் உண்டு நம் ஊரில், ஆனால், கடையை விட்டு எழுந்து வந்து, பயன் கூட்டும் சேவை கொடுக்க ஆள் கிடைக்காது நம் ஊரில். அப்படியே எழுந்து வந்தாலும், பெரும்பாலும் செய்யும் வேலையும் பாதி வேலை தான். US/UK இல் சின்ன வேலை செய்ய வந்தால் கூட, வேலை செய்தப்பின் இடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் சேர்த்து முடித்து பயன் கூட்டுவார்கள். நம் ஊரில், செய்யும் வேலையில், பல தரப்பிரிவுகள், ஆனால் செய்யும் தொழில் தெய்வம் என்று பேச்சு மட்டும் :(
நம் ஊரில் இருக்கும் மனித வளத்திற்கும், இன்றைக்கு உள்ள தகவல் தொழில் நுட்பத்திற்கும், இந்த மாதிரி வேலையெல்லாம், இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் சேவை பெற முடிந்தால், எவ்வளவு உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற ஆதங்கம் எழுகிறது.

இன்னுமொரு யோசனை, நேற்று சென்னை வீதிகளில் வந்தபோது, கொடிகள், தோரணங்கள் நட்டு கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் பார்த்தேன். இப்போதைக்கு கிட்ட தட்ட எல்லா கட்சிகளுமே, 'தொழில்' கட்சிகள் ஆகி, பெருமளவு 'outsourcing' செய்வது பொது அறிவு. இதை ஒட்டி தேர்தல் தொடர்பான சேவைகளை அளிப்பது ஒரு பெரும் வாய்ப்பாக எனக்கு தோன்றுகிறது. இந்த idea வை யாராவது develop செய்து business plan ரெடி பண்ணினால் venture capital கிடைப்பது நிச்சயம். think about this: தேர்தல்-சேவைகள்.காம் - with dedicated verticals for each political party, with clear NDA for confidentiality :)

Tuesday, August 12, 2008

வேலை தேடுவது என்றால், யாராவது வேலை தருவார்கள்/தரவேண்டும் என காத்திருப்பது அல்ல!

நீங்கள் உங்களை நம்பி, உங்களுக்குள்ள திறமையை பயன்படுத்தி, உங்களால் முடிந்த முதலை போட்டு, உங்களால் முடிந்த அளவு முயன்றால் உங்கள் உழைப்பே உங்களுக்கு வேலை ஆகிவிடும்.

ஒரு சின்ன கதையில் ஆரம்பிக்கிறேன் … ஒரு அறையில் மூடிய கண்ணாடி ஜன்னலில் முட்டி, முட்டி வெகு நேரம் முயற்சித்தது ஒரு வண்டு. அந்த முட்டாள் வண்டுவிற்கு, அருகில், திறந்திருந்த கதவு தெரியாமல் போனது, வீட்டுக்காரன் குற்றமா என்ன?

சமீபத்தில் வழி போக்கன் குறுப்பிட்டிருந்த (இ. சொ http://enthanvaanam.blogspot.com/2008/08/part2.html ), வங்கி வேலைக்கு முயலும் லட்ச கணக்கானோரை பார்க்கும் போது இது தான் தோணுகிறது.)

யாரவது வேலை தர வேண்டும் என்று, இருக்கின்றார்களே ஒழிய உருவாகும் வாய்ப்புக்களை பயன் படுத்த மாட்டேன் என்கிறார்கள். உதாரணத்திற்கு, வீடு, நிலம் வாங்க, வாடகைக்கு ஆள் பிடிக்க ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்களே தவிர, வெளி ஊர், வெளி நாடு வாழ் மக்களுக்கு தேவை படுகின்ற, வாடகை வசூல் செய்வது, சிறு, சிறு பராமரிப்பு பண்ணுவது, வரி, மின் கட்டணம் போன்றவற்றை கட்டுவது போன்ற பொறுப்புகளை ஏற்று, value added services ஆக தரக்கூடிய 'வீடு பராமரிப்பு' சேவை போன்றவற்றை கொடுக்க ஆள் இல்லை. இது மட்டும் இல்லை - வீட்டு வேலைக்கு ஆள் அனுப்ப தயார் ஆக இருக்கிறார்களே தவிர, வீட்டு வேலை ஆட்களை, ஒரு குழுவாக அமைத்து, ஒரு தொழில்முறை சேவையாக நடத்த ஆள் இல்லை.

மேலும் சில எனக்கு தோணும் சில வாய்ப்புக்கள் …
- அலைபேசி மூலம் வீடு வாசலில் சேவை (காய்கறி, பத்திரிகை, தபால், வங்கி வேலை)
- சிறு வியாபாரிகளுக்கு தேவை படும் ‘கொள்முதல்’ அல்லது கூரியர் சேவைகள்
- IPO/MF forms subbroking, forms distribution
- விளம்பர துண்டு பிரசுரம் விநியோகம்
- முதியோருக்கு தேவையான சேவைகள் – மருத்துவமனை, கார் ஓட்டுதல் போன்றவை
- கிராமபுரங்களில் இருந்தால் இருக்கும் சூழ்நிலை பொறுத்து அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான சிறு சேவைகள் – உதாரணத்திற்கு, அலைபேசி மூலம் விவசாய கூலிகள் ஏற்பாடு செய்து அனுப்புவது, உள்ளூர் விளைப்பொருள்களுக்கு ஒரு கூட்டுறவு முயற்சியாக, நல்ல விலை கிடைக்க முயல்வது

இது ஒரு குறிப்பிற்காகத்தான்... உங்களால் மட்டும் தான் உங்களுக்கு அருகில் உள்ள வாய்ப்பை கண்டுகொள்ள முடியும். தேடவேண்டும் என்று தோன்றவேண்டும், அதை தான் இங்கு முயல்கிறேன்.

வாழ்க்கையில் நாம் போக வேண்டிய தூரத்தை எப்போதும் ஒரே ‘பஸ்’ மூலம் போக நினைப்பது இயல்பு தான். ஆனால், அந்த பஸ்சுக்காக வாழ் நாள் முழுவதும் காத்திருப்பவர்கள், வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வாய்ப்பில்லை. என் சமவயது மக்களில் சிலர் இன்னமும் ‘வேலை’ தேடுவது பற்றி கேட்டு நொந்த நேரமும் உண்டு. என்ன எல்லாம் விதிப்படி தான் - நீங்கள் விதியை நம்பும் வரை.

பி. கு. ஆங்கிலம் தெரிந்தால், ‘it happened in india’ போன்ற புத்தகங்களை கண்டிப்பாக தொழில் முனைவோர் படிக்க வேண்டும். வெற்றி ஒரு நாளில் வருவதில்லை – தொடரும் விடாமுயற்சிக்கு ஒரு கட்டத்தில் விளயவேண்டிய ஒன்று தான் வெற்றி என்பது.

Sunday, August 10, 2008

மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?

தமிழில் எழுத தெரிந்த எல்லோரும் தமிழ் எழுத்தாளர்கள் ஆனால் 'சாரு' போன்றவர்களுக்கு எப்படி பிழைப்பு நடத்த முடியும்? இதைப்போலத்தான் ஒவ்வொரு தொழிலும். எல்லோருக்கும் வேலை வேண்டுமானால் பலர் புதிய வாய்ப்புக்களை தேடித்தானே போக வேண்டியிருக்கிறது.

புது வழி கண்டு பிடிப்போரை போற்றும் அளவிற்கு புரியாவிட்டாலும், இளப்பமாக பேசாமல் இருக்கிற அளவிற்கு கூட பொது அறிவு போத வில்லை என்றால் ஜாதி அரசியலையோ அல்லது தமிழுணர்வு பற்றியோ கருத்து சொல்ல வேண்டியது தானே. He appeared to be intelligent and then he spoke என்று எனக்கு பிடித்த வரி ஒன்று உண்டு. கருத்து சொல்லும் வரை, உம் கருத்தின் அருகதை உமக்கு மட்டும் தான் தெரியும், இப்போது எல்லோருக்குமே தெரியுமே - பாவம் தான் சார் நீங்க.

90 களின் ஆரம்பம் முதல் இந்த மென்பொருள் துறையில் சேராமல் இருந்தால் இத்தனை லட்சம் பேர்களும் என்ன பண்ணி இருப்பார்கள்?

91 யில் இறக்குமதியை (balance of payments) சமாளிக்க முடியாமல் நம் நாடு தங்கத்தை லண்டனில் அடகு வைத்த கதை இவர்களுக்கு எல்லாம் புரியுமா? அந்த நிலை ஏற்பட்ட வருடத்தில் நம் நாட்டிற்க்கு மென்பொருள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய மொத்த அந்நிய செலாவணியையும் சேர்த்தால் ஒரு சில ஆயிரம் கோடிகள் மட்டுமே (used to be accounted under invisibles category because it was so minuscle portion of overall). ஆனால் இப்போது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்புவது மட்டும் வருடத்திற்கு $25Bnக்கு மேல்(1 லட்சம் கோடி ரூபாய்கள்); இது தவிர்த்து மென்பொருள் ஏற்றுமதியில் வருமானம் $50Bnக்கு மேல்(2 லட்சம் கோடி).

இந்த கோடிகளின் மதிப்பு, நாடளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் கூட நம்மால் இறக்குமதி பண்ணி பட்டினி சாவை தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தேடுவர்களுக்கு புரியும். லோக்கல் சரக்கு வாங்கி வயிறு வளர்க்கும் எல்லோருக்கும் புரியுமா என்ன?

அது போகட்டும், சாருநிவேதிதா மாதிரி பிதற்றும் ஆட்கள் செய்யும் தொழில்களையே பார்ப்போம் - அச்சுதொழிலின் மூலப்பொருளான newsprint தட்டுபாடுகளும், அதனையொட்டி நசிந்து போன பத்திரிகைகளும், வேலை இழந்த எழுத்தாளர்களையும் இவர்கள் நினைத்து பார்ப்பார்களா?

நம் நாடு கடந்த 10-15 வருடங்களில் பொருளாதாரத்திலும், நாட்டுப்பற்றிலேயும், கல்வியறிவிலும், தனி மனித சுதந்திரத்திலும், பாரபட்சமற்ற சமூக முன்னேற்றத்திலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு catalyst மென்பொருள் துறை என்பது வரலாற்றில் மாற்றமுடியாத உண்மை. அதில் முதல் தலைமுறை என்ற வகையில் என்னை போன்றவர்களுக்கு என்றைக்குமே பெருமை தான்.

போற்றதகு செயல்களை செய்து பேர் எடுப்பவர்கள் ஒரு பக்கம். பேர் எடுத்தவர்களை குறை சொல்லி பேர் எடுக்க நினைப்பவர்கள் இன்னொரு பக்கம்.

வரலாற்றில் எதை வேண்டுமானாலும் இவரை போன்றவர்கள் பல தலைமுறைகளாக மாற்றி வந்திருந்தாலும், இப்போது நடப்பது தகவல் புரட்சியாயிற்றே, என்ன செய்து விடமுடியும் இவர்களால் - நமக்கென ஊடகம் நடத்தும் நம்மிடம் :)

பதிவா நமக்கா என்றிருந்த எனக்கு, வழிபோக்கனின் பதிவு (இங்கே சொடுக்கவும்) மற்றும், அவர் குறிப்பிட்ட சாருநிவேதிதாவின் வலைப்பதிவும் (இ.சொ.) இந்த பதிவை போட தூண்டியவை (வேலையில்லாத ஞாயிறு மாலை மட்டும் தான் காரணம் என்று நினைத்து விடாதீர்கள்)