Showing posts with label வேலை தேடுதல். Show all posts
Showing posts with label வேலை தேடுதல். Show all posts

Tuesday, August 12, 2008

வேலை தேடுவது என்றால், யாராவது வேலை தருவார்கள்/தரவேண்டும் என காத்திருப்பது அல்ல!

நீங்கள் உங்களை நம்பி, உங்களுக்குள்ள திறமையை பயன்படுத்தி, உங்களால் முடிந்த முதலை போட்டு, உங்களால் முடிந்த அளவு முயன்றால் உங்கள் உழைப்பே உங்களுக்கு வேலை ஆகிவிடும்.

ஒரு சின்ன கதையில் ஆரம்பிக்கிறேன் … ஒரு அறையில் மூடிய கண்ணாடி ஜன்னலில் முட்டி, முட்டி வெகு நேரம் முயற்சித்தது ஒரு வண்டு. அந்த முட்டாள் வண்டுவிற்கு, அருகில், திறந்திருந்த கதவு தெரியாமல் போனது, வீட்டுக்காரன் குற்றமா என்ன?

சமீபத்தில் வழி போக்கன் குறுப்பிட்டிருந்த (இ. சொ http://enthanvaanam.blogspot.com/2008/08/part2.html ), வங்கி வேலைக்கு முயலும் லட்ச கணக்கானோரை பார்க்கும் போது இது தான் தோணுகிறது.)

யாரவது வேலை தர வேண்டும் என்று, இருக்கின்றார்களே ஒழிய உருவாகும் வாய்ப்புக்களை பயன் படுத்த மாட்டேன் என்கிறார்கள். உதாரணத்திற்கு, வீடு, நிலம் வாங்க, வாடகைக்கு ஆள் பிடிக்க ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்களே தவிர, வெளி ஊர், வெளி நாடு வாழ் மக்களுக்கு தேவை படுகின்ற, வாடகை வசூல் செய்வது, சிறு, சிறு பராமரிப்பு பண்ணுவது, வரி, மின் கட்டணம் போன்றவற்றை கட்டுவது போன்ற பொறுப்புகளை ஏற்று, value added services ஆக தரக்கூடிய 'வீடு பராமரிப்பு' சேவை போன்றவற்றை கொடுக்க ஆள் இல்லை. இது மட்டும் இல்லை - வீட்டு வேலைக்கு ஆள் அனுப்ப தயார் ஆக இருக்கிறார்களே தவிர, வீட்டு வேலை ஆட்களை, ஒரு குழுவாக அமைத்து, ஒரு தொழில்முறை சேவையாக நடத்த ஆள் இல்லை.

மேலும் சில எனக்கு தோணும் சில வாய்ப்புக்கள் …
- அலைபேசி மூலம் வீடு வாசலில் சேவை (காய்கறி, பத்திரிகை, தபால், வங்கி வேலை)
- சிறு வியாபாரிகளுக்கு தேவை படும் ‘கொள்முதல்’ அல்லது கூரியர் சேவைகள்
- IPO/MF forms subbroking, forms distribution
- விளம்பர துண்டு பிரசுரம் விநியோகம்
- முதியோருக்கு தேவையான சேவைகள் – மருத்துவமனை, கார் ஓட்டுதல் போன்றவை
- கிராமபுரங்களில் இருந்தால் இருக்கும் சூழ்நிலை பொறுத்து அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான சிறு சேவைகள் – உதாரணத்திற்கு, அலைபேசி மூலம் விவசாய கூலிகள் ஏற்பாடு செய்து அனுப்புவது, உள்ளூர் விளைப்பொருள்களுக்கு ஒரு கூட்டுறவு முயற்சியாக, நல்ல விலை கிடைக்க முயல்வது

இது ஒரு குறிப்பிற்காகத்தான்... உங்களால் மட்டும் தான் உங்களுக்கு அருகில் உள்ள வாய்ப்பை கண்டுகொள்ள முடியும். தேடவேண்டும் என்று தோன்றவேண்டும், அதை தான் இங்கு முயல்கிறேன்.

வாழ்க்கையில் நாம் போக வேண்டிய தூரத்தை எப்போதும் ஒரே ‘பஸ்’ மூலம் போக நினைப்பது இயல்பு தான். ஆனால், அந்த பஸ்சுக்காக வாழ் நாள் முழுவதும் காத்திருப்பவர்கள், வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வாய்ப்பில்லை. என் சமவயது மக்களில் சிலர் இன்னமும் ‘வேலை’ தேடுவது பற்றி கேட்டு நொந்த நேரமும் உண்டு. என்ன எல்லாம் விதிப்படி தான் - நீங்கள் விதியை நம்பும் வரை.

பி. கு. ஆங்கிலம் தெரிந்தால், ‘it happened in india’ போன்ற புத்தகங்களை கண்டிப்பாக தொழில் முனைவோர் படிக்க வேண்டும். வெற்றி ஒரு நாளில் வருவதில்லை – தொடரும் விடாமுயற்சிக்கு ஒரு கட்டத்தில் விளயவேண்டிய ஒன்று தான் வெற்றி என்பது.