Tuesday, August 12, 2008

வேலை தேடுவது என்றால், யாராவது வேலை தருவார்கள்/தரவேண்டும் என காத்திருப்பது அல்ல!

நீங்கள் உங்களை நம்பி, உங்களுக்குள்ள திறமையை பயன்படுத்தி, உங்களால் முடிந்த முதலை போட்டு, உங்களால் முடிந்த அளவு முயன்றால் உங்கள் உழைப்பே உங்களுக்கு வேலை ஆகிவிடும்.

ஒரு சின்ன கதையில் ஆரம்பிக்கிறேன் … ஒரு அறையில் மூடிய கண்ணாடி ஜன்னலில் முட்டி, முட்டி வெகு நேரம் முயற்சித்தது ஒரு வண்டு. அந்த முட்டாள் வண்டுவிற்கு, அருகில், திறந்திருந்த கதவு தெரியாமல் போனது, வீட்டுக்காரன் குற்றமா என்ன?

சமீபத்தில் வழி போக்கன் குறுப்பிட்டிருந்த (இ. சொ http://enthanvaanam.blogspot.com/2008/08/part2.html ), வங்கி வேலைக்கு முயலும் லட்ச கணக்கானோரை பார்க்கும் போது இது தான் தோணுகிறது.)

யாரவது வேலை தர வேண்டும் என்று, இருக்கின்றார்களே ஒழிய உருவாகும் வாய்ப்புக்களை பயன் படுத்த மாட்டேன் என்கிறார்கள். உதாரணத்திற்கு, வீடு, நிலம் வாங்க, வாடகைக்கு ஆள் பிடிக்க ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்களே தவிர, வெளி ஊர், வெளி நாடு வாழ் மக்களுக்கு தேவை படுகின்ற, வாடகை வசூல் செய்வது, சிறு, சிறு பராமரிப்பு பண்ணுவது, வரி, மின் கட்டணம் போன்றவற்றை கட்டுவது போன்ற பொறுப்புகளை ஏற்று, value added services ஆக தரக்கூடிய 'வீடு பராமரிப்பு' சேவை போன்றவற்றை கொடுக்க ஆள் இல்லை. இது மட்டும் இல்லை - வீட்டு வேலைக்கு ஆள் அனுப்ப தயார் ஆக இருக்கிறார்களே தவிர, வீட்டு வேலை ஆட்களை, ஒரு குழுவாக அமைத்து, ஒரு தொழில்முறை சேவையாக நடத்த ஆள் இல்லை.

மேலும் சில எனக்கு தோணும் சில வாய்ப்புக்கள் …
- அலைபேசி மூலம் வீடு வாசலில் சேவை (காய்கறி, பத்திரிகை, தபால், வங்கி வேலை)
- சிறு வியாபாரிகளுக்கு தேவை படும் ‘கொள்முதல்’ அல்லது கூரியர் சேவைகள்
- IPO/MF forms subbroking, forms distribution
- விளம்பர துண்டு பிரசுரம் விநியோகம்
- முதியோருக்கு தேவையான சேவைகள் – மருத்துவமனை, கார் ஓட்டுதல் போன்றவை
- கிராமபுரங்களில் இருந்தால் இருக்கும் சூழ்நிலை பொறுத்து அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான சிறு சேவைகள் – உதாரணத்திற்கு, அலைபேசி மூலம் விவசாய கூலிகள் ஏற்பாடு செய்து அனுப்புவது, உள்ளூர் விளைப்பொருள்களுக்கு ஒரு கூட்டுறவு முயற்சியாக, நல்ல விலை கிடைக்க முயல்வது

இது ஒரு குறிப்பிற்காகத்தான்... உங்களால் மட்டும் தான் உங்களுக்கு அருகில் உள்ள வாய்ப்பை கண்டுகொள்ள முடியும். தேடவேண்டும் என்று தோன்றவேண்டும், அதை தான் இங்கு முயல்கிறேன்.

வாழ்க்கையில் நாம் போக வேண்டிய தூரத்தை எப்போதும் ஒரே ‘பஸ்’ மூலம் போக நினைப்பது இயல்பு தான். ஆனால், அந்த பஸ்சுக்காக வாழ் நாள் முழுவதும் காத்திருப்பவர்கள், வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வாய்ப்பில்லை. என் சமவயது மக்களில் சிலர் இன்னமும் ‘வேலை’ தேடுவது பற்றி கேட்டு நொந்த நேரமும் உண்டு. என்ன எல்லாம் விதிப்படி தான் - நீங்கள் விதியை நம்பும் வரை.

பி. கு. ஆங்கிலம் தெரிந்தால், ‘it happened in india’ போன்ற புத்தகங்களை கண்டிப்பாக தொழில் முனைவோர் படிக்க வேண்டும். வெற்றி ஒரு நாளில் வருவதில்லை – தொடரும் விடாமுயற்சிக்கு ஒரு கட்டத்தில் விளயவேண்டிய ஒன்று தான் வெற்றி என்பது.

18 comments:

Ramya Ramani said...

நீங்க சொல்லும் கருத்தோடு நானும் ஒத்துபோகிறேன் சுந்தர் சார்.. நாம் தான் வாய்பை தேட வேண்டும்..ஆங்கிலத்தில் சொல்வார்கள் "Wise People see Opportunity in Every Act"!

Selva Kumar said...

//வெற்றி ஒரு நாளில் வருவதில்லை – தொடரும் விடாமுயற்சிக்கு ஒரு கட்டத்தில் விளயவேண்டிய ஒன்று தான் வெற்றி என்பது//

ஆருமையான கருத்து சுந்தர்.

உங்கள் இரண்டு பதிவுகள பாத்த நீங்க புதுப்பதிவர் போல தெரியல.

தொடர்ந்து எழுதவும்.

வாழ்த்துக்கள்!!

Selva Kumar said...

==நாம் தான் வாய்பை தேட வேண்டும்..ஆங்கிலத்தில் சொல்வார்கள் "Wise People see Opportunity in Every Act"!==

ஆம் ரம்யா..

உண்மைதான். நாம் வாய்ப்பு உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அதில் குஜராத்தீஸ் முதலிடம்.

Selva Kumar said...

சுந்தர் தமிழ் மணத்துல சேர்ந்திடுங்க.

3 பதிவு ஆச்சே!!

Sundar சுந்தர் said...

வருகைக்கு நன்றி ரம்யா!

Sundar சுந்தர் said...

// வழிப்போக்கன் said...
உங்கள் இரண்டு பதிவுகள பாத்த நீங்க புதுப்பதிவர் போல தெரியல.//
உங்கள் பாராட்டுக்கு நன்றி வ.போ! தமிழில் எழுதி ரொம்ப வருஷம் ஆச்சு. மற்றபடி கருத்து சொல்றது தான் கிட்ட தட்ட தொழிலே.

Sundar சுந்தர் said...

//சுந்தர் தமிழ் மணத்துல சேர்ந்திடுங்க//
நன்றி. சேர்ந்துட்டேன்!

கயல்விழி said...

இதை இன்று தான் கவனித்தேன். புது பதிவர் போல இல்லாமல் ரொம்ப இன்பார்மெட்டிவாக எழுதுகிறீர்கள். நமக்கு வாய்ப்புகள் இல்லை என்று கவலைபட தெரியுமே தவிர, இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தெரியாது.

நீங்கள் குறிப்பிட்டிருபவை பெரும்பாலும் "Blue collar jobs" என்று நினைக்கிறேன். கூடவே வெள்ளைக்காலர் வேலை வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிடலாம், நிறைய பேர் பயனடைவார்கள்.

Sundar சுந்தர் said...

//கயல்விழி said... புது பதிவர் போல இல்லாமல் ரொம்ப இன்பார்மெட்டிவாக எழுதுகிறீர்கள். //
நன்றி கயல்!
//கூடவே வெள்ளைக்காலர் வேலை வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிடலாம், நிறைய பேர் பயனடைவார்கள்.// உண்மை தான். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மொக்கையாகி விடப்போகிறதென்று பார்க்கிறேன். படிப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கவேண்டும், என்னால் முடிந்த விஷயமாகவும் இருக்க வேண்டும். அப்படி எதாவது தோணினால் அடுத்த பதிவு போடுகிறேன். பங்கு சந்தை முதலீடு, பொருளாதாரம் பற்றி ஆங்கிலத்தில் தனியாக ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கிறேன்.

Selva Kumar said...

சுந்தர் நிச்சயம்

//பங்கு சந்தை முதலீடு, பொருளாதாரம் பற்றி ஆங்கிலத்தில் தனியாக ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கிறேன்.
//

எழுதவும். நான் கூட முதலில் ஆங்கிலத்தில் இது பற்றிதான் தொடங்கினேன்.


நிறைய படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் எனக்கு எழுதும் அளவிற்கு அனுபவம் இல்லையென்று தோன்றியதால் நிறுத்திவிட்டேன். (டெலிட் செய்து விட்டேன்)

என்னுடைய முழு ஆதரவு உண்டு.

இந்த வாரம் ஊருக்கு போவதால் 2-3 வாரம் கழித்து பதிவில் சந்திப்போம்.

Selva Kumar said...

==உண்மை தான். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மொக்கையாகி விடப்போகிறதென்று பார்க்கிறேன். படிப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கவேண்டும், என்னால் முடிந்த விஷயமாகவும் இருக்க வேண்டும்==


நீங்கள் அதிக விசயங்களை எழுத முடியாவிட்டாலும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

(May be URLs, Good Books, Soft copy books, documents etc)

அது ஒருத்தருக்காவது பயனளித்தால் நன்மைதானே.

குடுகுடுப்பை said...

என் முதல் பதிவு வந்து பாருங்கள்.

http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_14.html

Sundar சுந்தர் said...

// வழிப்போக்கன் said... //
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பங்குகள் குறித்து பகிரக்கூடிய பயனுள்ள யோசனைகள் சில உண்டு. படித்தது கொஞ்சம், பணம் போட்டு பின் கற்றது மீதி ;)

நீங்கள் குறுப்பிட்ட மாதிரி, முடிந்த அளவு, cross references for all information, கருத்துக்களை மட்டும் பதிவாக போடனும்ன்னு சரியான format பத்தி யோசிக்கறேன். இந்த weekend முதல் பதிவு போட்டுடறேன்!

நீங்க நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க. நான் கூட அடுத்த வாரம் ஜூட்.

கார்க்கிபவா said...

நல்ல எண்ணம்..சீக்கிரம் தொடங்க என் வாழ்த்துக்கள்

Sundar சுந்தர் said...

// கார்க்கி said...
நல்ல எண்ணம்..சீக்கிரம் தொடங்க என் வாழ்த்துக்கள்//

போட்டுட்டேன் - its more like my investing diary ... வந்து பாருங்க..

http://investinindianshares.blogspot.com/

anbudan vaalu said...

very useful post......


//வாழ்க்கையில் நாம் போக வேண்டிய தூரத்தை எப்போதும் ஒரே ‘பஸ்’ மூலம் போக நினைப்பது இயல்பு தான். ஆனால், அந்த பஸ்சுக்காக வாழ் நாள் முழுவதும் காத்திருப்பவர்கள், வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வாய்ப்பில்லை.//

these lines make a very good impact.....

Sundar சுந்தர் said...

thanks Vaals!

elamthenral said...

சுந்தர் சார்..
உன்மையில் நான் என் வேலையை எண்ணி கவலைபட்டிருந்தேன்..
மேலும் உங்களின் இந்த வேலை அதிர்ச்சையையும், ஆச்சர்யசியமும் தந்திருக்கிறது.....

- அலைபேசி மூலம் வீழ வணசலதல் சேவை (கணய்கறத, பத்ததரதகை, தபணல், வங்கத வேலை)
- சது வதயணபணரதகளுக்ர தேவை பழம் பகணள்முதல் அல்லது கூரதயர் சேவைகள்
- IPO/MF forms subbroking, forms distribution
- வதளம்பர துண்ழ பதரலரம் வதநதயேணகம்
- முததயேணருக்ர தேவையணன சேவைகள் மருத்துவமனை, கணர் ஓட்ழதல் பேணன்றவை
- கதரணமஹரங்களதல் இருந்தணல் இருக்ரம் சூழ்நதலை பபணுத்து அங்கதருக்ரம் மக்களுக்ர தேவையணன சது சேவைகள் உதணரணத்ததற்ர, அலைபேசத மூலம் வதவசணய கூலதகள் ஏற்பணழ பசய்து அனுப்ஹவது, உள்ளூர் வதளைப்பபணருள்களுக்ர ஒரு கூட்ழறவு முயற்சதயணக, நல்ல வதலை கதடைக்க முயல்வது
உஙகளின் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன்...
இது போல் என்னை போன்றவர்களுக்கு உற்சாகத்தை படுத்தும் வகையில் இன்னும் உங்களின் பதிவு அமைய ...
என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் நண்பரே!!!!