Sunday, August 31, 2008

ஏதாவது செய்யணும் பாஸ்!

இன்று ஏதாவது செய்யணும் பாஸ்! பார்த்து, அதன்பின் நரசிம் அறிவித்திருக்கும் போட்டி
படித்தபோது தோன்றிய சில கருத்துக்கள்...

பல விஷயங்களில் அரசையும், அரசியல் வாதிகளையும் நம்பியது, 80-90 களோடு ஒழியட்டும். இன்றைய தேதியில் நிகழ்வது தகவல் புரட்சி. இதனுடன், தொழில் முனைவது ஒரு புரட்சியானால், நம் ஒவ்வொரு பொது பிரச்சினையுமே ஒரு வாய்ப்புதான்!

சில 'வாய்ப்புகள்' இங்கே ...

- TOI அறிவித்துள்ள teachindia போன்ற உதவி தேவைபடுகிறவர்களையும், உதவக்கூடிய ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலான சேவைகள் - இது பல பிரிவுகளுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு அனுபவம் தேடுவோர் ஒருப்பக்கம் - வேலை செய்வோருக்கு நிறைய சம்பளம் கொடுக்க முடியாத தொழில் முனைவோர் மறுப்பக்கம்; கல்வி செலவிற்கு பணம் தேவைப்படும் ஏழை மாணவர்கள் ஒருப்பக்கம்- உண்மையான தேவைகளுக்கு நன்கொடை கொடுக்க தயாரோனோர் மறுப்பக்கம்; volunteer mentoring for career/educational options; பரவலாக கிடைக்கதற்கரிய துறைகளில் உள்ள நிபுணர்களின் கருத்து பரிமாறுவதற்கான அமைப்புகள் (say a forum for entreprenuers to setup a Limited company with guidances on legal, funding challenges; export trade guidance for SME etc)

- சிறு விழாக்கள், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் பற்றிய பெயர், தர, விவர சேவை.

- இணையம் மூலம் கார் பயணம் பகிர்தல் (realtime car pooling)

- நமக்கு தேவைப்படாத பொருட்களை விற்பதற்கான சந்தை (garage sale, charity sale events)

- நகர்புறங்களில், சிறு சிறு வேலை செய்பவர்கள் பற்றிய, தர உத்திரவாதத்துடன், வரையறுக்கப்பட்ட கூலியுடன் கூடிய பெயர்விவர சேவை - உதாரணத்திற்கு ஒரு சொந்த அனுபவம்.. சென்ற வாரம் பெங்களூர் போயிருந்தபோது, சுவரில் படங்கள் மாட்ட ஆணி அடிக்க, 1 மணி நேர வேலைக்கு, அரை நாள் தேடி, சில மணிநேரங்கள் காத்திருந்து 300 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. நொந்த விஷயம் என்னவென்றால், என் அவசரத்திற்கு, கிட்ட தட்ட கெஞ்சி, காரில் கூட்டி போய், காரில் திரும்ப விட்டு ம்ம் பேசாமல், அடுத்த முறை DIY தான் என்று நினைக்க வைத்தது :( ஒவ்வொரு முறையும், electrical, plumbing, தச்சு, கட்டிட பராமரிப்பு வேலை செய்ய முனையும் போதும் இந்த கதை தான்.

தெருவிற்கு இரண்டு electrical கடைகள் உண்டு நம் ஊரில், ஆனால், கடையை விட்டு எழுந்து வந்து, பயன் கூட்டும் சேவை கொடுக்க ஆள் கிடைக்காது நம் ஊரில். அப்படியே எழுந்து வந்தாலும், பெரும்பாலும் செய்யும் வேலையும் பாதி வேலை தான். US/UK இல் சின்ன வேலை செய்ய வந்தால் கூட, வேலை செய்தப்பின் இடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் சேர்த்து முடித்து பயன் கூட்டுவார்கள். நம் ஊரில், செய்யும் வேலையில், பல தரப்பிரிவுகள், ஆனால் செய்யும் தொழில் தெய்வம் என்று பேச்சு மட்டும் :(
நம் ஊரில் இருக்கும் மனித வளத்திற்கும், இன்றைக்கு உள்ள தகவல் தொழில் நுட்பத்திற்கும், இந்த மாதிரி வேலையெல்லாம், இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் சேவை பெற முடிந்தால், எவ்வளவு உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற ஆதங்கம் எழுகிறது.

இன்னுமொரு யோசனை, நேற்று சென்னை வீதிகளில் வந்தபோது, கொடிகள், தோரணங்கள் நட்டு கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் பார்த்தேன். இப்போதைக்கு கிட்ட தட்ட எல்லா கட்சிகளுமே, 'தொழில்' கட்சிகள் ஆகி, பெருமளவு 'outsourcing' செய்வது பொது அறிவு. இதை ஒட்டி தேர்தல் தொடர்பான சேவைகளை அளிப்பது ஒரு பெரும் வாய்ப்பாக எனக்கு தோன்றுகிறது. இந்த idea வை யாராவது develop செய்து business plan ரெடி பண்ணினால் venture capital கிடைப்பது நிச்சயம். think about this: தேர்தல்-சேவைகள்.காம் - with dedicated verticals for each political party, with clear NDA for confidentiality :)

9 comments:

பரிசல்காரன் said...

அருமையாக உள்ளது நண்பரே!

Anonymous said...

கடைசி யோசனை நன்றாக உள்ளது. என்ன அரசியல் கட்சிகளிடம் பனம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும்

வருண் said...

ஏதாவது செய்யனும்னு சத்தமாக சொல்வதே, முதற்படி சுந்தர்!

இந்த மாதிரி பொதுநோக்கு சிந்தனைகள் எல்லாம் எனக்கு வருவதில்லை :(

SK said...

அருமையா எழுதி இருக்கீங்க

இந்த தொடரும் அருமையா இருக்கு.

SK said...

ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்லுங்க சுந்தர்.

Sundar சுந்தர் said...

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி - பரிசல், வடகரை வேலன், SK அவர்களே!
// வருண் said... இந்த மாதிரி பொதுநோக்கு சிந்தனைகள் எல்லாம் எனக்கு வருவதில்லை :(
//
நன்றி வருண். அந்தந்த சூழ்நிலைக்கேற்ப தான் சிந்தனை எல்லாம். சமீபத்தில் இந்தியா போய் வந்த போது பார்த்த inefficiencies தான் இந்த கருத்துக்களுக்கு மூலம். மற்றப்படி, எல்லாவிதமான சிந்தனைகளும் வந்து போனபடிதான் உள்ளது. எனக்கு பொதுநோக்கு ரொம்பவும் குறைவு தான்.

கார்க்கிபவா said...

இப்போதுதான் படித்தேன்.. நீங்க பிசினஸ் பண்றீங்களா? அருமையான யோசனைகள்

Sundar சுந்தர் said...

//இப்போதுதான் படித்தேன்.. நீங்க பிசினஸ் பண்றீங்களா? அருமையான யோசனைகள்//
நன்றி. பிசினஸ் பண்ணத்தான் ஆசை. இப்போதைக்கு 'முதல்' சேர்த்துக்கிட்டு இருக்கேன் அதோடு பிசினஸ் பிளானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்.

SK said...

என்ன சுந்தர் ரொம்ப நாள் எதுவுமே பதிவு இல்லை. வேலை பலு அதிகமா இருக்கா?