தமிழில் எழுத தெரிந்த எல்லோரும் தமிழ் எழுத்தாளர்கள் ஆனால் 'சாரு' போன்றவர்களுக்கு எப்படி பிழைப்பு நடத்த முடியும்? இதைப்போலத்தான் ஒவ்வொரு தொழிலும். எல்லோருக்கும் வேலை வேண்டுமானால் பலர் புதிய வாய்ப்புக்களை தேடித்தானே போக வேண்டியிருக்கிறது.
புது வழி கண்டு பிடிப்போரை போற்றும் அளவிற்கு புரியாவிட்டாலும், இளப்பமாக பேசாமல் இருக்கிற அளவிற்கு கூட பொது அறிவு போத வில்லை என்றால் ஜாதி அரசியலையோ அல்லது தமிழுணர்வு பற்றியோ கருத்து சொல்ல வேண்டியது தானே. He appeared to be intelligent and then he spoke என்று எனக்கு பிடித்த வரி ஒன்று உண்டு. கருத்து சொல்லும் வரை, உம் கருத்தின் அருகதை உமக்கு மட்டும் தான் தெரியும், இப்போது எல்லோருக்குமே தெரியுமே - பாவம் தான் சார் நீங்க.
90 களின் ஆரம்பம் முதல் இந்த மென்பொருள் துறையில் சேராமல் இருந்தால் இத்தனை லட்சம் பேர்களும் என்ன பண்ணி இருப்பார்கள்?
91 யில் இறக்குமதியை (balance of payments) சமாளிக்க முடியாமல் நம் நாடு தங்கத்தை லண்டனில் அடகு வைத்த கதை இவர்களுக்கு எல்லாம் புரியுமா? அந்த நிலை ஏற்பட்ட வருடத்தில் நம் நாட்டிற்க்கு மென்பொருள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய மொத்த அந்நிய செலாவணியையும் சேர்த்தால் ஒரு சில ஆயிரம் கோடிகள் மட்டுமே (used to be accounted under invisibles category because it was so minuscle portion of overall). ஆனால் இப்போது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்புவது மட்டும் வருடத்திற்கு $25Bnக்கு மேல்(1 லட்சம் கோடி ரூபாய்கள்); இது தவிர்த்து மென்பொருள் ஏற்றுமதியில் வருமானம் $50Bnக்கு மேல்(2 லட்சம் கோடி).
இந்த கோடிகளின் மதிப்பு, நாடளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் கூட நம்மால் இறக்குமதி பண்ணி பட்டினி சாவை தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தேடுவர்களுக்கு புரியும். லோக்கல் சரக்கு வாங்கி வயிறு வளர்க்கும் எல்லோருக்கும் புரியுமா என்ன?
அது போகட்டும், சாருநிவேதிதா மாதிரி பிதற்றும் ஆட்கள் செய்யும் தொழில்களையே பார்ப்போம் - அச்சுதொழிலின் மூலப்பொருளான newsprint தட்டுபாடுகளும், அதனையொட்டி நசிந்து போன பத்திரிகைகளும், வேலை இழந்த எழுத்தாளர்களையும் இவர்கள் நினைத்து பார்ப்பார்களா?
நம் நாடு கடந்த 10-15 வருடங்களில் பொருளாதாரத்திலும், நாட்டுப்பற்றிலேயும், கல்வியறிவிலும், தனி மனித சுதந்திரத்திலும், பாரபட்சமற்ற சமூக முன்னேற்றத்திலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு catalyst மென்பொருள் துறை என்பது வரலாற்றில் மாற்றமுடியாத உண்மை. அதில் முதல் தலைமுறை என்ற வகையில் என்னை போன்றவர்களுக்கு என்றைக்குமே பெருமை தான்.
போற்றதகு செயல்களை செய்து பேர் எடுப்பவர்கள் ஒரு பக்கம். பேர் எடுத்தவர்களை குறை சொல்லி பேர் எடுக்க நினைப்பவர்கள் இன்னொரு பக்கம்.
வரலாற்றில் எதை வேண்டுமானாலும் இவரை போன்றவர்கள் பல தலைமுறைகளாக மாற்றி வந்திருந்தாலும், இப்போது நடப்பது தகவல் புரட்சியாயிற்றே, என்ன செய்து விடமுடியும் இவர்களால் - நமக்கென ஊடகம் நடத்தும் நம்மிடம் :)
பதிவா நமக்கா என்றிருந்த எனக்கு, வழிபோக்கனின் பதிவு (இங்கே சொடுக்கவும்) மற்றும், அவர் குறிப்பிட்ட சாருநிவேதிதாவின் வலைப்பதிவும் (இ.சொ.) இந்த பதிவை போட தூண்டியவை (வேலையில்லாத ஞாயிறு மாலை மட்டும் தான் காரணம் என்று நினைத்து விடாதீர்கள்)
Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts
Sunday, August 10, 2008
Subscribe to:
Posts (Atom)