Sunday, August 10, 2008

மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?

தமிழில் எழுத தெரிந்த எல்லோரும் தமிழ் எழுத்தாளர்கள் ஆனால் 'சாரு' போன்றவர்களுக்கு எப்படி பிழைப்பு நடத்த முடியும்? இதைப்போலத்தான் ஒவ்வொரு தொழிலும். எல்லோருக்கும் வேலை வேண்டுமானால் பலர் புதிய வாய்ப்புக்களை தேடித்தானே போக வேண்டியிருக்கிறது.

புது வழி கண்டு பிடிப்போரை போற்றும் அளவிற்கு புரியாவிட்டாலும், இளப்பமாக பேசாமல் இருக்கிற அளவிற்கு கூட பொது அறிவு போத வில்லை என்றால் ஜாதி அரசியலையோ அல்லது தமிழுணர்வு பற்றியோ கருத்து சொல்ல வேண்டியது தானே. He appeared to be intelligent and then he spoke என்று எனக்கு பிடித்த வரி ஒன்று உண்டு. கருத்து சொல்லும் வரை, உம் கருத்தின் அருகதை உமக்கு மட்டும் தான் தெரியும், இப்போது எல்லோருக்குமே தெரியுமே - பாவம் தான் சார் நீங்க.

90 களின் ஆரம்பம் முதல் இந்த மென்பொருள் துறையில் சேராமல் இருந்தால் இத்தனை லட்சம் பேர்களும் என்ன பண்ணி இருப்பார்கள்?

91 யில் இறக்குமதியை (balance of payments) சமாளிக்க முடியாமல் நம் நாடு தங்கத்தை லண்டனில் அடகு வைத்த கதை இவர்களுக்கு எல்லாம் புரியுமா? அந்த நிலை ஏற்பட்ட வருடத்தில் நம் நாட்டிற்க்கு மென்பொருள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய மொத்த அந்நிய செலாவணியையும் சேர்த்தால் ஒரு சில ஆயிரம் கோடிகள் மட்டுமே (used to be accounted under invisibles category because it was so minuscle portion of overall). ஆனால் இப்போது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்புவது மட்டும் வருடத்திற்கு $25Bnக்கு மேல்(1 லட்சம் கோடி ரூபாய்கள்); இது தவிர்த்து மென்பொருள் ஏற்றுமதியில் வருமானம் $50Bnக்கு மேல்(2 லட்சம் கோடி).

இந்த கோடிகளின் மதிப்பு, நாடளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் கூட நம்மால் இறக்குமதி பண்ணி பட்டினி சாவை தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தேடுவர்களுக்கு புரியும். லோக்கல் சரக்கு வாங்கி வயிறு வளர்க்கும் எல்லோருக்கும் புரியுமா என்ன?

அது போகட்டும், சாருநிவேதிதா மாதிரி பிதற்றும் ஆட்கள் செய்யும் தொழில்களையே பார்ப்போம் - அச்சுதொழிலின் மூலப்பொருளான newsprint தட்டுபாடுகளும், அதனையொட்டி நசிந்து போன பத்திரிகைகளும், வேலை இழந்த எழுத்தாளர்களையும் இவர்கள் நினைத்து பார்ப்பார்களா?

நம் நாடு கடந்த 10-15 வருடங்களில் பொருளாதாரத்திலும், நாட்டுப்பற்றிலேயும், கல்வியறிவிலும், தனி மனித சுதந்திரத்திலும், பாரபட்சமற்ற சமூக முன்னேற்றத்திலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு catalyst மென்பொருள் துறை என்பது வரலாற்றில் மாற்றமுடியாத உண்மை. அதில் முதல் தலைமுறை என்ற வகையில் என்னை போன்றவர்களுக்கு என்றைக்குமே பெருமை தான்.

போற்றதகு செயல்களை செய்து பேர் எடுப்பவர்கள் ஒரு பக்கம். பேர் எடுத்தவர்களை குறை சொல்லி பேர் எடுக்க நினைப்பவர்கள் இன்னொரு பக்கம்.

வரலாற்றில் எதை வேண்டுமானாலும் இவரை போன்றவர்கள் பல தலைமுறைகளாக மாற்றி வந்திருந்தாலும், இப்போது நடப்பது தகவல் புரட்சியாயிற்றே, என்ன செய்து விடமுடியும் இவர்களால் - நமக்கென ஊடகம் நடத்தும் நம்மிடம் :)

பதிவா நமக்கா என்றிருந்த எனக்கு, வழிபோக்கனின் பதிவு (இங்கே சொடுக்கவும்) மற்றும், அவர் குறிப்பிட்ட சாருநிவேதிதாவின் வலைப்பதிவும் (இ.சொ.) இந்த பதிவை போட தூண்டியவை (வேலையில்லாத ஞாயிறு மாலை மட்டும் தான் காரணம் என்று நினைத்து விடாதீர்கள்)

27 comments:

Selva Kumar said...

நன்றி சுந்தர்.

Selva Kumar said...

நான் விட்ட கருத்துகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

Selva Kumar said...

இன்னும் அவர் நிறைய குறை கூறியுள்ளார்..

1) பெண்கள் குடிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது

2)பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள் என்று.

Selva Kumar said...

என் பதிவு உங்களை பதிவெழுத தூண்டியதா ? மிக்க மகிழ்ச்சி.

என்னை பொறுத்தவரை பதிவெழுதுவது அட்லீஸ்ட் நாம் சில விசயங்களில் தெளிவு பெற உதவும்.

அந்த வகையில்தான் அப்பப்போ சில நல்ல பதிவுகளை எழுத முனைவது. நீங்களும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

Selva Kumar said...

அவருடைய பெயர் சாரு நிவேதிதா.
உங்கள் பதிவில் சில இடத்தில் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.

(உங்கள் மெயில் ஐடி இல்லாததால் இங்கே சொல்கிறேன். மன்னிச்சுருங்க!!)

Sundar சுந்தர் said...

//வழிப்போக்கன் said... என்னை பொறுத்தவரை பதிவெழுதுவது அட்லீஸ்ட் நாம் சில விசயங்களில் தெளிவு பெற உதவும்.
அந்த வகையில்தான் அப்பப்போ சில நல்ல பதிவுகளை எழுத முனைவது. நீங்களும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.//
உண்மை தான். எழுதுவதும், அது பற்றி கருத்து பரிமாறுவதும், திருப்தியாகத்தான் இருக்கிறது. உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி. கயல் தான் என்னை முதலில் எழுத சொன்னார்கள், அப்புறம் பார்க்கலாம் என்றிருந்த எனக்கு, உங்கள் பதிவு தான் முதல் பதிவிற்கு வித்து.

தவறான கருத்துக்களை படிக்க நேரும் போது, வரும் போது கோபம் வருமே, அதன் வெளிப்பாடாக படிப்பதை நிறுத்துவதே இது வரை பழக்கம். எதிர் கருத்து கொடுக்க இது ஒரு வாய்ப்பு.

Sundar சுந்தர் said...

//இன்னும் அவர் நிறைய குறை கூறியுள்ளார்..
1) பெண்கள் குடிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது
2)பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள் என்று.
August 10, 2008 9:12 PM//

ஏன் இவர் குடிக்கலாம், பெண்கள் குடிக்க கூடாதா? குடித்துவிட்டு இவரிடம் சேட்டை பண்ணாதவரை எவருக்கும் அதை பற்றி ஆட்சேபனை பண்ண எந்த உரிமையும் கிடையாது.

பணத்தை சம்பாதிப்பவர்களுக்கு அதை செலவு செய்ய முழு உரிமை உண்டு. எந்தக்காலத்தில் இருக்கிறார் இவர்? இப்போது தான் மக்கள் நமக்கிருக்கும் 7 அடிப்படை உரிமைகளில் சிலவற்றை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் இருக்கிறது இவர்களை போன்றவர்களுக்கு.

Sundar சுந்தர் said...

//அவருடைய பெயர் சாரு நிவேதிதா.
உங்கள் பதிவில் சில இடத்தில் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.
(உங்கள் மெயில் ஐடி இல்லாததால் இங்கே சொல்கிறேன். மன்னிச்சுருங்க!!) //

தப்பேயில்லை. நான் கொஞ்சம் சோம்பேறி, சரி பார்ப்பதற்கு. தவிர, எப்படி சரி செய்யறதுன்னு பார்க்கிறேன்.

அது சரி said...

சுந்தர்,
இது சூப்பர். நீங்க பாட்டுக்கு Balance of Payment அப்ப்டின்னு சொல்றீங்க. பாவம் அவரு, மெரண்டு போயிற போறாரு.

உங்கள் முதல் பதிவுக்கு வாழ்த்து. தொடருங்கள்!

Sundar சுந்தர் said...

// அது சரி said...
சுந்தர்,
இது சூப்பர். நீங்க பாட்டுக்கு Balance of Payment அப்ப்டின்னு சொல்றீங்க. பாவம் அவரு, மெரண்டு போயிற போறாரு.
உங்கள் முதல் பதிவுக்கு வாழ்த்து. தொடருங்கள்! //
ரொம்ப நன்றி. ரொம்ப தெம்பாயிருக்கு!

அவரா படிக்க போறார். நம்மளை போன்றவர்கள் படிக்காத பத்திரிகைகளில் மறு பிரசுரம் பண்ண முடியுமான்னு தேடிட்டு இருப்பார். இந்த மாதிரி கருத்துக்களை வலைப்பக்கம் கொண்டுவரவே இவங்களுக்கெல்லாம் ஒரு பயம் வந்த சரிதான். ஒ பக்கம் போடற ஞானிக்கு பயம் வர மாதிரி.

கயல்விழி said...

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

அதுவும் நல்ல சப்ஜெக்ட் தேர்தெடுத்து இருக்கிறீர்கள்

கயல்விழி said...

பெண்கள் குடிப்பது இருக்கட்டும், இவர் சொல்வதற்கு முன் குடியை நிறுத்தனும்(ஐயா பாட்டில்களுடன் போஸ் கொடுக்கும் கோலத்தை பார்த்து இந்த கமெண்ட் எழுத தோன்றியது

SK said...

வாழ்த்துக்கள் சுந்தர்

இந்த ஞாநி மற்றும் சாரு நிவேதிதா தொல்லை தாங்க முடியலை. கைக்கு வந்ததை எல்லாம் எழுதறாங்க. சாரு நிவேதிதவோட தசாவதாரம் விமர்சனம் பாத்துட்டு நடுங்கிட்டேன். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா சொல்லி.

உங்களோட பதிவ இன்னும் முழுசா படிக்கலை. படிச்சிட்டு திரும்ப எழுதறேன்.

manikandan said...

நீங்க சொல்ற கருத்துக்கள் நல்லா இருக்கு. இப்ப இந்தியால நடக்கிற எல்லா விதமான பிரச்சனைக்கும் மென்பொருள் துறைய குறை சொல்றது வசதியா போச்சு.
globalisation / IT இது ரெண்டுத்துக்குமே வித்தியாசம் தெரியாத மக்கள் ரொம்ப அதிகம்.
ஆனா இந்தியாவுல இந்த மாதிரி விமர்சனம் வருது ஒன்னும் தப்பு இல்லையான்னு தோனுது. ஒரு mechanical/automobile/chemical பொறியாளருக்கும், மென்பொருள் துறைல வேல பாக்கற ஒரு சராசரி ஆளுக்கும் கிடைக்கற சம்பளம் ரொம்ப வித்யாசம் ரொம்ப அதிகம். இதுவே வேற எந்த நாடுகள்லயும் இல்ல. ஒரு சமூகத்துல இந்த அளவு வித்தியாசம் இருந்தா அது கலவரமா மாற வாய்ப்புக்கள் அதிகம். இதுக்கும் மென்பொருள் துறை காரம் இல்ல. நம்ப சமூகத்துல சில வேலைக்கு அதிக மதிப்பும், சில வேலைக்கு மதிப்பே கொடுக்காம இருக்கிறது தான் முக்கிய காரணம்.

என்னோட பதிவ படிச்சி அத உங்க பதிவுல சேத்ததுக்கு ரொம்ப நன்றி.

manikandan said...

என்னோட பின்னோட்டத்துல இருந்த எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

லதானந்த் said...

முதல் பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்களைப் பார்த்தபோது மனசு சமாதானம் ஆச்சு!

என் பக்கத்தையும் படிச்சிருக்கிங்க போல.

கயல்விழியோட பக்கங்களைத் தொடர்ந்து படிங்க.

நீங்களும் தொடர்ந்து எழுதுங்க.

பொருளதார மாற்றங்கள் நெறைய வந்தாலும் கலாச்சார மாற்றங்களும் நெறைய வரணும்.

வாழ்த்துக்கள்.

கயல்விழி said...

முதல் பதிவு எழுதியதால் இனிமேல் தமிழ்மணத்தில் இணையலாமே(ஏற்கெனெவே செய்தாகிவிட்டது என்றால் மன்னிக்கவும் :))

Sundar சுந்தர் said...

// கயல்விழி said...
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
லதானந்த் said...
முதல் பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.
SK said...
வாழ்த்துக்கள் சுந்தர்
//
கயல், லதானந்த், SK,
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.
நீங்க தொடர்ந்து வருவதாயிருந்தா நானும் அடுத்து ஏதாவது தோணும்போது போடுகிறேன் :)

Sundar சுந்தர் said...

// கயல்விழி said... பெண்கள் குடிப்பது இருக்கட்டும், இவர் சொல்வதற்கு முன் குடியை நிறுத்தனும்//
உங்கள் கருத்துக்கு நன்றி கயல்.
குடியை பற்றி பொதுவாக பேசினால் அதில் ஒரு ஞாயம். பெண்கள் குடிப்பது பற்றி மற்றும் பேசுவதில் எனக்கு ஞாயம் தெரியவில்லை. ஆணாதிக்கம் தான் தெரிகிறது. இவர்களை போன்றவர்களால் தான், நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே தொடர்கிறது.

தமிழ்மணத்தில் பார்த்தேன் - குறைந்தது மூன்று பதிப்பாவது போட்டப்பின் தான் சேர்த்துகொள்வார்களாம். வேறு ஏதாவது போட்டால் பார்க்கலாம்.

Sundar சுந்தர் said...

// அவனும் அவளும் said...
நீங்க சொல்ற கருத்துக்கள் நல்லா இருக்கு. இப்ப இந்தியால நடக்கிற எல்லா விதமான பிரச்சனைக்கும் மென்பொருள் துறைய குறை சொல்றது வசதியா போச்சு.
globalisation / IT இது ரெண்டுத்துக்குமே வித்தியாசம் தெரியாத மக்கள் ரொம்ப அதிகம்.
ஆனா இந்தியாவுல இந்த மாதிரி விமர்சனம் வருது ஒன்னும் தப்பு இல்லையான்னு தோனுது. ஒரு mechanical/automobile/chemical பொறியாளருக்கும், மென்பொருள் துறைல வேல பாக்கற ஒரு சராசரி ஆளுக்கும் கிடைக்கற சம்பளம் ரொம்ப வித்யாசம் ரொம்ப அதிகம். இதுவே வேற எந்த நாடுகள்லயும் இல்ல. ஒரு சமூகத்துல இந்த அளவு வித்தியாசம் இருந்தா அது கலவரமா மாற வாய்ப்புக்கள் அதிகம். இதுக்கும் மென்பொருள் துறை காரம் இல்ல. நம்ப சமூகத்துல சில வேலைக்கு அதிக மதிப்பும், சில வேலைக்கு மதிப்பே கொடுக்காம இருக்கிறது தான் முக்கிய காரணம். //

வருமானத்தில் வேற்றுமை இருப்பது தப்பில்லை. அந்த வேற்றுமையை போக்க வழியில்லாமல் இருப்பது தான் தப்பு. எனக்கு பிடிச்ச விஷயம் - american dream; அது போல நம் நாட்டிலேயும் பிறர் தயவு இல்லாமல் நடுத்தட்டு மக்கள், பெரிய கனவுகளை நனவாக்க முடிந்த வகையில் இது ஒரு நல்ல ஆரம்பம். எந்த துறைக்கு மதிப்பு அதிகம் என்பது ஒரு சுழற்சியாக மாறும். 80 களில் அரசாங்க வேலையோ, அல்லது, பொதுத்துறை, வங்கி வேலையோ தான் லட்சியமாக இருந்த நிலை போய், இன்று ஐ டி; நாளை யார் கண்டார்? நம் நாட்டில் பல புரட்சிகள் இப்போது ஆரம்பமாவது போல் எனக்கு தெரிகிறது - உதாரணத்திற்கு, nano மூலம் 'frugal engineering' போன்ற கருத்துக்களை இந்தியாவிடமிருந்து தான் உலகமே கற்கிறது. நடக்கும் அலைபேசி மூலம் நடந்தேறும் உற்பத்தித்திறன் புரட்சிக்கு, என் சகோதரி சொன்ன - அலை பேசி மூலம், மீன் விற்க விசாரித்த, மீன் கூடைக்காரி ஒரு சாட்சி.
மற்ற நாடுகளில் இருந்த IT Vs.non-IT வருமான வித்தியாசத்தை நாமெல்லாம் சேர்ந்து குறைச்சது தனி புத்தகம் போடக்கூடிய அளவு பெரிய கதை. இன்னமும் போதிய வித்தியாசம் இருக்கே.

//என்னோட பதிவ படிச்சி அத உங்க பதிவுல சேத்ததுக்கு ரொம்ப நன்றி.//
நானும் உங்க பதிவுகள்ள தேடி பார்த்தேன் - எதை சொல்றிங்கன்னு தெரியல. ஒருவேளை ஒத்த கருத்தாக இருந்தால் அப்படி தோணலாம்.

Sundar சுந்தர் said...

// லதானந்த் said...என் பக்கத்தையும் படிச்சிருக்கிங்க போல.//

உங்க பக்கங்களை படிக்காமலா. விரும்பி படிப்பேன்னுங்கோ! உங்கள் வட்டார மொழிகளும், கிராமப்புற வாழ்க்கை முறை பற்றிய கண்ணோட்டங்களும் ரொம்ப தனித்தன்மையாக பட்டது - தொடர்ந்து எழுதுங்க.
அதுமட்டுமா, 15 வருடங்களுக்கு முன் ஒரு முறை டாப் ஸ்லிப் வந்த கதையும், முதல் முறையாய் 'bird watching' என்றால் வானத்தை பார்க்கணும்ன்னு தெரிஞ்சிக்கிட்ட கதையும் ஞாபகம் வந்துது.

ஜெகதீசன் said...

சுந்தர்,
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்..

manikandan said...

******எதை சொல்றிங்கன்னு தெரியல. ஒருவேளை ஒத்த கருத்தாக இருந்தால் அப்படி தோணலாம்*******

இல்ல. நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. உங்களோட blog pagela சைடு toolbarla லிங்க் இருந்தது. அத சொன்னேன்.

கயல்விழி said...

// பெண்கள் குடிப்பது பற்றி மற்றும் பேசுவதில் எனக்கு ஞாயம் தெரியவில்லை. ஆணாதிக்கம் தான் தெரிகிறது. இவர்களை போன்றவர்களால் தான், நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே தொடர்கிறது.
//

சரியா சொல்லி இருக்கீங்க. குடியை எதிர்ப்பவர் பாட்டில்களுடன் படம் எடுத்து போட்டுக்கொள்ளக்கூடாது. இவர்கள் அனைத்து கலாச்சார சீரழிவுகளுக்கும் பெண்களே காரணம் என்று சொல்லிவிடுவார்கள்.

தொடர்ந்து எழுதுங்க, நிச்சயம் வருகிறோம்.

Ramya Ramani said...

சொல்ல வந்த கருத்தை தெளிவா Substantiate செய்து சொல்லிருக்கீங்க ..வாழ்த்துக்கள் !

Sundar சுந்தர் said...

//Ramya Ramani said...
சொல்ல வந்த கருத்தை தெளிவா Substantiate செய்து சொல்லிருக்கீங்க ..வாழ்த்துக்கள் !//
உங்கள் பாராட்டுக்கு நன்றி ரம்யா!

superlinks said...

வணக்கம்
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.