Thursday, August 7, 2008

இன்று முதல்...

வாசிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிலே எனக்கு தமிழ் பதிவுகள் படிப்பது ரொம்பவும் பிடித்து விட்டது. அதனால் என் மனம் கவர்ந்த பதிப்புகளை குறித்து வைத்து கொள்ளவும், பின்னோட்டம் மூலம் கருத்து பரிமாறி கொள்ளவும் இன்று முதல் இந்த வலை தளத்தை பயன் படுத்த போகிறேன்.

இப்போதைக்கு சொந்த பதிவுகள் போடும் திட்டம் எனக்கு எதுவும் இல்லை.

12 comments:

கயல்விழி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு நல்வரவு சுந்தர். வாழ்த்துக்கள்!!

நீங்கள் தமிழ் மணத்தில் இணையப்போவது இல்லையா?

PS வொர்ட் வெரிபிகேஷனை நீக்கினால் நிறைய பேர் பின்னூட்டமிடுவார்கள்.

Selva Kumar said...

நல்வரவு..

எழுத ஆரம்பீங்க சுந்தர்.

Sundar சுந்தர் said...

வழிப்போக்கன் அவர்களே, வரவேற்ப்புக்கு நன்றி. இப்போதைக்கு எனக்கு படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பதிப்புகளை தொடர்ந்து படிக்க முதலில் பழக்க படுத்திகொள்கிறேன். பகிர தூண்டும் கருத்து தோன்றும் போது நிச்சயம் பதிய ஆரம்பிக்கிறேன். நீங்கள் பதிந்த எதிர்கால சிறுகதையை மிகவும் ரசித்தேன். ஜெ கே சமாச்சாரம் ஒன்னும் புரியலே. தமிழ் சினிமா கொஞ்சம் எனக்கு தூரம் தான்.
தமிழ் செய்திகளையே, கூகிள் தமிழ் செய்தி பிரிவு வந்த பிறகு தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

Selva Kumar said...

அப்படியா..நன்றிங்க சுந்தர்.

ஜே.கே மேட்டர் சும்மா டைம்பாசுக்ககு..


நல்ல பதிவுகள் அப்பஅப்ப நிச்சயம் எழுதுறேன்.படிச்சுட்டு சொல்லுங்க.

Sundar சுந்தர் said...

//ஜே.கே மேட்டர் சும்மா டைம்பாசுக்ககு.//

எனக்கும் satire பிடிக்கும். எனக்கு இப்போதைய தமிழ் சினிமா நிகழ்வுகள் அந்தளவு பரிச்சயம் இல்லாததால் ரசிக்க முடியவில்லைன்னு சொல்ல வந்தேன். எல்லாமே time pass தானே :)

SK said...

வாங்க சுந்தர். நிறைய படிங்க அப்போ தான் நிறைய எழுதவும் முடியும். நானும் உங்கள போல தான் எழுத முடியாம வேணாம்னு இருந்தேன் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் எழுதலாம்னு யோசனை வந்து இருக்கு. ஒரு சுத்து சுத்திட்டு வந்து எழுத ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்.

Sundar சுந்தர் said...

//நீங்கள் தமிழ் மணத்தில் இணையப்போவது இல்லையா?
PS வொர்ட் வெரிபிகேஷனை நீக்கினால் நிறைய பேர் பின்னூட்டமிடுவார்கள்.//

முதல் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி கயல் - இன்னுமொரு பாடம். இப்போது verification ஐ எடுத்து விட்டேன்.
தமிழ் மனம் ஒரு தொகுப்பு தளம் மட்டும் தானே? சொந்த பதிவு போட ஆரம்பித்தால், இணைந்து கொள்கிறேன்.

லதானந்த் said...

நிறையப் படிங்க.

தொடர்ந்து எழுதுங்க.

என்னிக்குமே என்னோட ஆதரவு உண்டு!

Sundar சுந்தர் said...

// லதானந்த் said...
நிறையப் படிங்க.

தொடர்ந்து எழுதுங்க.

என்னிக்குமே என்னோட ஆதரவு உண்டு!//

ரொம்ப நன்றி! நீங்க சொன்ன மாதிரி ஒரு அளவோட நிறுத்த பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

வலை உலகில் வந்தமைக்கு நல்வரவு.

//இப்போதைக்கு எனக்கு படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பதிப்புகளை தொடர்ந்து படிக்க முதலில் பழக்க படுத்திகொள்கிறேன்.//

அப்படிப்போடு அருவாளை:-)))))

நம்ம வீட்டுப்பக்கம் வந்து படிச்சுட்டுப் போங்க சுந்தர்.

கிரி said...

//துளசி கோபால் said...
அப்படிப்போடு அருவாளை:-)))))//

அருவாளாளாளாளாளாளாளாளாளாளா ;-)

பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் சுந்தர்

வருண் said...

எண்ண அலைகள்!!!

அழகான பெயர்!!

வணக்கம் சுந்தர்! :-)